மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் சர்ச்சைக்குள்ளாகி தடை நீக்கப்பட்ட பாரம்பரிய பட்டிணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில்:




உணவக பில்லில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட 'சர்வீஸ் சார்ஜ்'! அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் ஆணையம்!


தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமிக்க பட்டிணப் பிரவேசம் விழா மிக சிறப்பாக நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர், பல்வேறு ஆதீனங்கள், ஜியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த அனைவருக்கும் அருளாசி வழங்குவதாக கூறினார். பட்டிணப் பிரவேச நாதஸ்வர கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விழாவாக, சமுதாய விழாவாக ஆதீன மடங்களில் பட்டிணப் பிரவேசம் விழா தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. 




Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!


இன்று அரசு சார்பில் கலைஞர்களுக்கு விருது கொடுப்பதற்கு முன்பாக நமது ஆதீனங்கள்தான்  முதன் முதலாக கலைஞர்களை தேர்வுசெய்து விருது கொடுத்து அவர்களை அறிமுகப்படுத்தியது. நாதஸ்வரவித்வான்கள், இலக்கியத்துறையில் உள்ள அறிஞர்களை ஆதீன புலவர்களாகவும், இசைப்புலவர்களாகவும், நாதஸ்வர கலைஞர்காளாக்கி ஆதீனங்கள் விருது கொடுத்துள்ளனர். கிராமிய கலைஞர்கள் பட்டிணப் பிரவேசம் நாளில்தான் தங்கள் இசைத்திறமையை காட்டுவார்கள் என்றார்.  




Chennai : தனியாக வசித்த 43 வயது பெண்.. பின்தொடர்ந்து ப்ளான் ! கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை!


25-வது குருமகா சன்னிதானம் இருந்த காலத்தில் மனிதனை மனிதன் சுமக்கலாமா என பெரியாரிடம் கோரிக்கை வைத்தார்கள் அதற்கு பெரியார் தமிழன் பல்லக்கில் வரவேண்டும் ஏன்று தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம், அனைவரும் சென்று பல்லக்கு தூக்கும்படி அப்போது அவர் அறிவுறுத்தியதாகவும், அந்த ஆண்டும் தடையில்லாமல் பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் பல்வேறு கட்சியினர் ஆட்சிபீடத்தில் இருந்தபோது இந்த பட்டிணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. 




அயன் படத்தை மிஞ்சும் கடத்தல்கள்.. இப்படியுமா யோசிப்பாங்க? விமான நிலையத்தில் சிக்கும் தங்கம்!!


பட்டிணப் பிரவேசம் விழா உலகுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தடைவிலக்கபட்ட சம்பவம் உலகுக்கு தெரிவிப்பதற்காக இப்படி ஒருசம்பவம் நடந்ததாக  கருதுவதாகவும் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.