தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் கல மழையானது பெய்து வருகிறது. மேலும் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளிப்பது மட்டுமின்றி பயிர்கள் வீடுகள் கால்நடைகள் என பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகள் குறித்து தமிழக அமைச்சர் குழுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய குழுவும் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளது.





முதல்வர் ஆய்வு செய்த பின் வெள்ளத்தால் பாதித்த பயிர்களுக்கு ஹக்டர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகளும் வேளாண் அதிகாரிகளும் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் வடகிழக்கு மழையானது தொடர்ந்து பெய்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால் மேலும் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகும் சூழல் உள்ள நிலையில் அப்போது எடுக்கப்படும் கணக்கெடுப்பு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையாது என்றார் கருத்தும் எழுந்துள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம், வேம்படி, இருவகொல்லை, கேவரொடை, கூழையார், வேட்டங்குடி, வெள்ளக்குளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார்  1500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இந்த சூழலில் வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட இரண்டறை மாதங்களே ஆன சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


Parag Agrawal Salary: சொத்து எவ்வளவு? சம்பளம் என்ன? மனைவி யாரு? - கூகுளில் டிரெண்டான ட்விட்டரின் புதிய சிஇஓ!


இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு கணக்கெடுக்கும் பணிக்கு சென்றிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக  1 ஹெக்டேருக்கு  75 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அரசு சார்பில் நிவாரணமாக 1 ஏக்கருக்கு  6 ஆயிரம் ரூபாய்  இடுபொருளாக வழங்கப்படுவது  தங்களுக்குத் தேவையில்லை என கூறி  நீரில் அழகிய பயிர்களை கையில் ஏந்தி வயலில்  இறங்கி அப்பகுதி விவசாயிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


எய்ட்ஸ், கொரோனா தொற்றுக்கு முடிவு கட்டுவோம் - உலக எய்ட்ஸ் தடுப்பு நாளையொட்டி முதல்வர் கடிதம்