ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரக் அக்ராவல் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.


இந்நிலையில், பரக் அக்ராவல் யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கு எவ்வளவு சம்பளம்? அவருடைய மனைவி யார்? என நெட்டிசன்கள் தேட தொடங்கிவிட்டனர். நேற்று இரவு முதல் இன்றைய டிரெண்ட் பரக் அக்ராவல்தான்! ஆனால், இதில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து அதிகம் தேடியது பரக் அக்ராவலின் சம்பள விவரம்தான்.






அதுமட்டுமின்றி, ட்விட்டரில் சில ஆயிரம் ஃபாலோவர்களை மட்டுமே பெற்றிருந்த பரக் அக்ராவலை இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர். ட்விட்டர் வாடிக்கையாளர் பலரும், பரக்கை டேக் செய்து ட்விட்டரில் இந்த ஆப்ஷன் வேண்டும், அந்த ஆப்ஷன் வேண்டும் என ட்வீட் செய்து வருகின்றனர்.


சரி பரக் அக்ராவலின் சம்பளம்தான் எவ்வளவு?


ட்விட்டர்  சிஇஓ பரக் அக்ராவலுக்கு ஆண்டுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பராக் அகர்வாலின் ஆண்டு வருமானம் ரூ.10,51,57,220.00. அதாவது பத்து கோடியே ஐம்பத்தோரு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து இருநூற்று இருபது மட்டுமே (Ten Crore Fifty One Lakh Fifty Seven Thousand Two Hundred Twenty)


நவம்பர் 29,2021 தேதியிட்ட பரக் அக்ராவலுக்கு ட்விட்டர் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. அவருக்கு இனி ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஊதியமாக வழங்கப்படும். அதுதவிர அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 150% ஆண்டுக்கான போனஸாக வழங்கப்படும். இது தவிர ரெஸ்ட்ரிக்டர் ஸ்டாக் யூனிட்ஸ் (RSU) வாயிலாக 12.5 மில்லியன் டாலர் கிடைக்கப் பெறுவார். பரக் அக்ராவலுக்கு ஓராண்டுக்கு 16 சமமான அளவிலான சம்பள உயர்வு வழங்கப்படும்.





அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் வேலை, அடுத்து 2018ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பு என பதவி உயர்வு பெற்றார் அவர். இப்போது ட்விட்டரின் சிஇஓவாகவும் பணியமர்ந்துவிட்டார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண