மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் 5500 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் 833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது அந்த பணிகள் விரைவில் தொடங்கும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என்றார். மேலும், பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் 14,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு ஆட்சியில் தமிழகத்தில் எங்கும் கள்ளச்சாராயம் விற்கவில்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தமிழக முதல்வர் நீதியரசர் என்றும், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராடினால் இணைந்து போராட தயாராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு? அவர் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார் என்றார். தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சாராயம் விற்றவருக்கு தமிழக அரசின் நிவாரணம் 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் குற்றவாளிகளுக்கும் குடும்பம் உள்ளது,
SC on Divorce: காதல் திருமண தம்பதிகளே அதிகளவில் விவாகரத்து பெறுகின்றனர் - உச்சநீதிமன்றம் வேதனை
பணத்தை வைத்து உயிரை மதிப்பீடு செய்யக் கூடாது இழப்பீடு வழங்குவதற்கு ஸ்கேல் (அளவுகோல்) உள்ளதா என அவர் கூறினார். கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும், அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.