மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட குமாரமங்கலம் காவல் சோதனை சாவடி அருகே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ளது. இந்த அரசு மதுபான கடையில் கழனிவாசலை சேர்ந்த 31 வயதான ராஜாராமன் என்பவர் மது அருந்தச் சென்றுள்ளார். இதேபோன்று மாப்படுகை கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரும் அங்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
Aishwarya Rai| பனாமா பேப்பர் வழக்கு: ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை!
அதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அப்போது இதனை பார்த்த ராஜாராமனின் தம்பி அருண்பாண்டியன் சமாதானம் பேசி இருவரையும் விலக்கி விட்டுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வரவே கீழே கிடந்த காலி மது பாட்டிலால் அருண்பாண்டியன் மற்றும் ராஜாராமனை விஜய் தாக்கியுள்ளார். இதில், அருண்பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
நாட்டு நாய்களில் இத்தனை வகைகளா?’ கலக்கும் கன்னியும் சிப்பிப்பாறையும்..!
தகவல் அறிந்து அங்கு திரண்ட அருண்பாண்டியனின் நண்பர்கள் விஜய்யை துரத்திச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விஜய் குமாரமங்கலம் சோதனைச் சாவடியில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் விடாமல் அங்கும் துரத்திச்சென்ற அருண்பாண்டியன் தரப்பினர் விஜய்யை வெளியில் விடக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெரம்பூர் காவல் நிலைய காவலர்கள் விஜய்யை காவல்நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்ற போது, போலீசாரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை
தொடர்ந்து காவல்துறையினர் அருண்பாண்டியன் அவரது அண்ணன் ராஜாராமன் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்களை உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை என்றும், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் மீண்டும் இருவரையும் சமாதானம் பேசி சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதித்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இருவரை தாக்கிய விஜய் மீது பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு: டிச.27 விண்ணப்பிக்க கடைசி நாள்!
மேலும் தற்போது மதுபான கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கும் போதே பல பிரச்சனைகள் எழும் நிலையில் மீண்டும் பழைய முறைப்படி காலை 10 மணிக்கே மதுபான கடைகளை திறக்க வழிவகை செய்யவேண்டும் என டாஸ்மாக் கடை ஊழியர்களும், மதுப்பிரியர்களும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.