தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம், தஞ்சை மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவையில்,

  டாஸ்மாக் பணியாளர்கள் பணி நேரம் முன்பு காலை 10 மணி முதல் 8 மணி வரை என்று இருந்ததை தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி என மாற்றி அமைக்கப்பட்டதால் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


பருத்தி கொள்முதலை அரசு நிறுத்திவிட்டதா? - உண்மை நிலையை விளக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை



நெல்லை பள்ளிக்கட்டட விபத்து - பொய்யான தகவல்களுக்கு அதிகாரிகள் உறுதி சான்று வழங்கியது அம்பலம்


ஆங்காங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு டாஸ்மாக் பணியாளர்கள் பணி நேரம் முன்பிருந்தது போல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்றி அமைக்க வேண்டும், கிராமப்புறங்கள், வெளிப்பகுதியிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள்,இரவு நேரத்தில் டாஸ்மாக்கை மூடிவிட்டு, வரும் போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும், இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் போது, விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், இரவு நேரத்தை முன்பு இருந்ததை போல் கொண்டு வரவேண்டும்.  தொகையை எடுத்து செல்லும் போது, கொள்ளையர்களால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலையும், ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.


இடிந்து விழும் நிலையில் சுவாமி மலை அரசுப்பள்ளி கட்டடங்கள் - அச்சத்தில் பெற்றோர்கள்



21ஆக உயரும் பெண்களின் திருமண வயது - இந்திய மாதர் தேசிய சம்மேளனம் எதிர்ப்பு


 


ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், உள்ளூரில் உள்ளவர்களின் தொல்லையை தடுத்து நிறுத்த வேண்டும். இரவு நேரங்களில் மதுபான விற்பனை செய்த அதிக தொகையை எடுத்து செல்லும் போது, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், 18 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணி பாதுகாப்பு. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,  கடந்த ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். தற்போது வந்துள்ள திமுக அரசு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியும் நிலையில் 96 பள்ளி கட்டடங்கள் - ஒரு வாரத்தில் இடித்து முடிக்க உத்தரவு