திமுக அரசு பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகளில் முதலில் கையெழுத்துயிட்ட மூன்று திட்டங்களில் ஆவின் பால் விலை குறைப்பும் ஒன்று. நடுத்தர ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பயன் தர விதமாக இத்திட்டம் பேசப்பட்டது. கடந்த ஆண்டு மே 16 ஆம் தேதி முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்த நிலையில்  முன்பு இருந்த விலையை விட பாலின் தரத்தை பெருத்து பச்சை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, நீலம் என பாக்கெட் கள் நிறம் பிரித்து ஒரு லிட்டருக்கு 3 வீதம் குறைத்து விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களிலும் அரசு விலை குறைப்பு செய்தும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாகியும்,  பாலின் உச்ச பட்ச விற்பனை விலையை விட அரசு குறைத்துள்ள 3 ரூபாய் சேர்த்து லிட்டருக்கு 5 ரூபாய்  கூடுதலாக விற்பனை செய்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் விலை கூடுதலாக விற்பனை செய்வது குறித்து ஆவின் பாலகங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் ஆவின் பாலக உரிமையாளர்கள் நாங்கள் அவ்வாறுதான் விற்பனை செய்வோம் என்றும், அதிகப்பட்ச விலையை விட கூடுதலாக வாங்கும் பணத்தில் பால் வளத்துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு என்றும் அதனால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள் என மிரட்டும் தோணியில் பேசுவதாகவும், அதற்கு தகுந்தாற்போல் அதிகபட்ச விலையை கண்காணிக்கும் அதிகாரியான லேபர் இன்ஸ்பெக்டர் மற்றும் லேபர் துணை கமிஷனர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை எனவும்  வேதனை தெரிவிக்கின்றனர்.




மேலும், இது குறித்து தஞ்சாவூர் மண்டல ஆவின் மேலாளரிடம் கேட்ட போது, அவ்வாறு விற்பனை செய்வது தவறு என்றும், அவர்களுக்கு அனுப்பும் பாலை அவர்கள் உடனே விற்பனை செய்யாமல் பல மணிநேரம் பாலங்களில் குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்வதால் மின்சாரம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட இதர செலவினங்களுக்காக  கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவித்தார்.




ஏழை மக்கள் சிரமத்தை குறைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைமுறை படுத்திய சூழலில் இந்த கொரோனா போன்ற பெரும் நோய் தொற்று எதிர்கொள்ள ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ள வேண்டும் என கூறப்படும் நிலையில், அனைத்து தரப்பு மக்களும் எளிதில் கிடைக்கும் ஊட்டச்சத்து ஓர் உணவு பால். 5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும், இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும் குடிப்பது நல்லது.  குழந்தைகளின் அத்தியாவசியமான உணவான பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.