நடிகை சமந்தா சமீப காலமாகவே அதிகம் கவனம் பெறும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார்.அவர் என்ன செய்தாலும் ஒன்று பேசு பொருளாகிவிடுகிறது இல்லையென்றால் வைரலாகிவிடுகிறது. சமந்தா தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை விட பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும், தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல துறைகளிலும் களம் கண்டு வருகிறார் சமந்தா. சமீபத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடல் என்றால், ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல். படம் வெளியாவதற்கு முன்பே பாடல் செம ஹிட்டடித்து. முக்கியமாக சமந்தா இந்த பாடலுக்கு ஆடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பாடலும் எதிர்பார்ப்பை மீறி நன்றாக இருந்ததால், பட்டிதொட்டியெல்லாம் பாடல் பட்டையை கிளப்பியது. ஏற்கெனவே, தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார்.
இந்தநிலையில், க்ரிட்டிக் சாய்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவின் உடை மற்றும் புகைப்படங்கள் நேற்று முழுவதும் இணையத்தில் படு வைரலானது. எப்பா அந்த பச்சை உடையில் சமந்தா எப்படி இவ்வளவு அழகா இருக்காங்க என்று தொடர்ந்து அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இதையடுத்து, தற்போது சமந்தா அணிந்து வந்த உடையின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அந்த பச்சை மற்றும் கருப்பு உடை குறித்து ஆன்லைனில் தேடி பார்த்தபோது அதன் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்று பதிவிடப்பட்டிருந்தனர்.
முன்னதாக, சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியதாகவும் தகவல் வெளியானது. சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது சமந்தா வலம் வர இருக்கிறார். ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா 1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதபோல், அடுத்த படத்தில் இருந்து 3 கோடி என நிர்ணயித்துவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்