கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமத்தில் இருந்தும் கோதையாறு மலை கிராமத்திற்கு இயங்கும் அரசு பேருந்து நடத்துனராக இருப்பவர் திருவட்டார் வலியாற்று முகம் பகுதியை சேர்ந்த பாபு விளிம்பு நிலை மனிதனாக செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வந்த இவர் கழிந்த 2008ஆம் ஆண்டு அரசு பேருந்து நடத்துனராக பணியில் சேர்ந்த அவருக்கு 2015 ஆம் ஆண்டு அரசின் நிரந்தர நடத்துனராக பதவி உயர்வு பெற்றார். அப்போதிருந்தே தடம் எண் 332 குளச்சல் கோதையாறு பேருந்தில் நடத்துனராக பணியாற்றும் இவர், வயதானவர்கள் பேருந்தில் ஏற பொருட்களுடன் காத்திருந்தால் பேருந்த நிறுத்த செய்து அந்த பொருட்களை ஏற்றியும் குறிப்பிட்ட இடம் வந்தவுடன் இறக்கியும் கொடுப்பார். அனைவரிடமும் மரியாதை கொடுத்தே பேசுவார். 




அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை முன் கூட்டியே தயார் செய்வார். தனது இருக்கைக்கு உரிமை கொண்டாடியதில்லை. ஒரு நாள் கூட நேரம் தவறாமல் பேருந்து வர காரணமாக உள்ளார். அரசுப்பேருந்தில் வரும்  மாற்றுத்திறனாளிகளுக்கு காசை எதிர்பார்க்காமல் இலவசமாக டிக்கெட் கொடுப்பதை நடத்துனர் பாபு வழக்கமாக கொண்டுள்ளார். நடத்துனர் பணி முடிந்து தினமும் பணிமனைக்கு கணக்கு கொடுக்க செல்லும் போது கணக்கில் பணம் ஷாட்டேஜ் வருமாம் இதை நிவர்த்தி செய்ய விடுமுறை  நாட்களில் தனது பழைய கூலி தொழிலான செங்கல் சூழைக்கே சென்று  வேலை செய்து அதில் வரும் பணத்தை கொண்டு போக்குவரத்து கழகத்திற்கு கட்ட வேண்டிய ஷாட்டேஜ் பணத்தை கட்டுகிறார். இதனால் நடத்துனர் பாபுவை சக ஊழியர்கள் ஷாட்டேஜ் பாபு என்று அழைக்க பின் நாளில் அவரை பொதுமக்களும் ஷாட்டேஜ் பாபு என்றழைக்க தொடங்கி உள்ளனர். புன்னகையுடனே நடத்துனர் பணியை செய்ந்து வரும் ஷாட்டேஜ் பாபு  மொத்தத்தில் அவர் பிறர் ஆசை படும்படி தனது வேலையை விரும்பி செய்கிறார்.





இது குறித்து ஷாட்டேஜ் பாபுவிடம் கேட்டபோது,

தான் பேருந்து நடத்துனர் ஆகும் முன் கூலி தொழில் செய்து வந்த நிலையில் நோயுற்ற தனது தாயையும் தந்தையையும் மருத்துவமனைக்கு பேருந்தில் கொண்டு செல்லும் போது நடத்துனர்கள் மனிதநேயமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாகவும் அவர்களை போன்ற நடத்துனர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிகளிடம் பரிவுடனும் பாசமாகவும் நடந்து கொள்வதாகவும் தனது மகனுக்கு உடல் நலம் சரி இல்லாத நிலையில் அவனை பராமரிக்க கூட உரிய பண வசதி இல்லாத போதும் ஏழை எளியவருக்கு இலவச பயண சீட்டு வழங்கி வருவதாகவும் தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு அரசு இலவச பயண சீட்டு வழங்கும் நேரத்தில் தனது பேருந்தில் இலவச டிக்கெட் இல்லாத காரணத்தால் தன்னால் முடிந்ததை செய்து வருவதாகவும் என்றும் உருக்கமாக கூறினார்.





இவரது மனிதநேயமிக்க சேவையை பாராட்டி அவருக்கு டர்போ விளையாட்டு கழகம் மற்றும் ஜி.வி.எஸ் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.மேலும் 5,000 ரூபாய்க்கு மேல் சில்லறை காசுகளையும் கொடுத்தனர். சுயநலம் கருதி உறவுகளையே கைவிடும் இந்த காலத்தில் தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணி உழைக்கும் இவரை போன்ற மாமனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.