தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியதாவது:- தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இன்று இந்தக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் பயிற்சி மையம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பேருராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி, சுகாதாரத்துறை, மாவட்டதொழில் மையம், மாவட்ட உணவு பொருள் வழங்கல், சமூக பாதுகாப்புத் திட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மறுவாழ்வு நலத்துறை, நிலஅளவை பதிவேடுகள் துறை, குடிநீர் வடிகால் வாரியம், டிஜிட்டல் இந்தியா, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் ஆகிய துறைகளின் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சையில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்
என்.நாகராஜன் | 30 Nov 2023 07:45 PM (IST)
தொற்றாநோய்கள் திட்டம் உட்பட பல திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றின் களப்பணிகளை நல்லமுறையில் செயல்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்
Published at: 30 Nov 2023 07:45 PM (IST)