உலகம் முழுவதும் பல வளர்ச்சிகள் கண்ட நிலையில் நாளுக்கு நாள் விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பெரும்பாலும் பலவகை விபத்துகள் நடைபெற்றாலும், வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளே அதிகம். அதுவும் தற்போது உள்ள காலகட்டத்தில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாக அதனை பார்க்கும் பலரையும் பதபதக்க வைக்கிறது. அந்த வகையில் மயிலாடுதுறை நடைபெற்ற ஒரு விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.




மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 20 -ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணம் மேற்கொண்டுள்ளார்‌.  பேருந்து நிறுத்தம் நெருங்கிய நிலையில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து முதியவர் எழுந்து படி அருகே நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து முதியவர் தவறி விழுந்துள்ளார்.


CM Stalin: ”தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட உத்தரவிடுங்கள்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...!




முதியவர் விழும் நிலையில் பேருந்து நடத்துனர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனாலும்  பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த முதியவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அருகில்  இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். தொடர்ந்து  மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து அங்கு மேல்சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Manipur Violence: உச்சக்கட்ட பரபரப்பு! மணிப்பூரில் மீண்டும் பதற்றம்...காவல் அதிகாரி சுட்டுக் கொலை...என்னதான் நடக்கிறது?




இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இறந்த நபர் எந்த ஊர் மற்றும் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் தற்போது வரை தெரியவில்லை. இதனால் காவல் துறையினர் இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முதியவர் பேருந்தில் இருந்து தவறி விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.