ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த வாய்மேடு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது நாகை எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். 

 

நாகை மாவட்டம் நாகூர் சிவன் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை பார்த்த ஆட்டோ டிரைவர் சாகுல் ஹமீது அதிர்ச்சி அடைந்தார். நாகூர்-நாகை இடையே ஆட்டோ ஓட்டும் சாகுல் ஹமீது ஆட்டோவிற்கு வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீசார் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்திருந்தனர். இதனையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். வாய்மேடு பகுதிக்கு செல்லாத ஆட்டோவில்  ஹெல்மெட் அணியவில்லை என தனக்கு அபராதம் விதித்திருப்பதாக குற்றம் சாட்டிய சாகுல் ஹமீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.