தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு நாகை விவசாயிகள் தெளிக்கின்றனர். காவிரி நீர் கை கொடுத்தால் தான் சம்பா சாகுபடியும் தொடங்க முடியும் கடைமடை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் 50000 ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 40,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போதுமான அளவு கடைமடை வந்து சேராத காரணத்தால் ஆற்றில் தடம் பதித்த காவிரி நீர் பல்வேறு கிராமங்களில் வாய்க்கால் மற்றும் பயிர்களுக்கு போதுமான அளவு சென்று சேராததால் தண்ணீரின்றி சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 



 

நாகை தாலுகாவில் சங்கமங்கலம், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் இதனால் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி வளராமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதேபோல் கீவலூர் தாலுகாவில் நெம்மேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும்  தண்ணீர் இன்றி வயல்கள் வெடித்தும் பயிர்கள் காய்ந்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், அருகில் உள்ள குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து இளம் பயிரை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

ஒரு சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்றும் நம்பிக்கை இன்றி தங்களது கால்நடைகளையும் பயிர்களில் மேச்சலுக்கு விடுகின்றனர். நேரடி விதைப்பில் ஈடுபட்டு ஒரு மாத காலமான நிலையில் பயிர்கள் வளர்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பயிரை காப்பாற்ற உடனடியாக முறையின்றி தண்ணீர் வழங்க வேண்டும், காப்பாற்ற முடியாத குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.