மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை, மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் ஆய்வு நடத்தினார். மயிலாடுதுறை அம்பேத்கார் நகரில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு வசிக்கும் தூய்மை பணியாளர்களிடம் குறைகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சுகாதாரம் தொடர்பான பொருள்கள் வழங்குதல், குடும்ப நலநிதி பிடித்தம் செய்தல், தொடர்பான பணிகள் குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 





அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்யவில்லை, வாகனங்களை பணியாளர்களே சீரமைக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய உபகரணங்களை ஒப்பந்தக்காரர்கள் சரிவர வழங்கவில்லை என்பது தெரியவந்ததையடுத்து, அவற்றை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர்களுக்கு 20 முதல் 30 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 11 மாநிலங்களில் தூய்மைப்பணியாளர் ஆணையம் இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


DMK Files Part 2: ஜூலை மாதம் DMK Files 2ம் பாகம் ரிலீசாகும் - மீண்டும் பரபரப்பை ஏற்றிய அண்ணாமலை..!




அதுபோல் தமிழகத்தில் வழங்கினால் பிஎஃப், இஎஸ்ஐ ஆகியவை சரியாக பிடிக்கப்படும். பாதாள சாக்கடை பராமரிப்புக்கு இயந்திரத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. ஒருசில இடங்களில் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலையில் மனிதர்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆணையம் கண்காணித்து வருகிறது என்றார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர்(பொ) அம்பிகாபதி, கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா மற்றும் அரசு துறை அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


RR vs KKR, IPL 2023: இது ராஜஸ்தான் டீமா?.. இல்ல, விக்ரமன் சார் படமா?..ஜெய்ஷ்வாலுக்காக இப்படியா?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண