தஞ்சை அருகே உள்ள புறநகர் கிராமத்தை சேர்ந்த முதியவர், மிகவும் ஏழ்மையில் இருந்ததால், ஆட்கள் இல்லாத காட்டுப்பகுதியில் தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மற்ற மாடுகள் சென்ற திசையில் அவரது தந்தையான முதியவர் மாடு மேய்யலுக்காக சென்று விட்டார். இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றனர். இதனை கண்காணித்து வந்த சென்னம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (26) மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதனால் செய்வதறியாத அப்பெண் கூச்சலிட்டு, தப்ப முயன்றார். இதனால் ஆத்திமடைந்த கோவிந்தராஜ் அப்பெண்ண கொடூரமாக தாக்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். கோவிந்தராஜிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி கூச்சலிட்டார். அப்போது பெண் அலறல் சத்தம் கேட்ட தந்தையான முதியவர், அப்பகுதிக்கு வந்த போது தனது பெண்ணை, வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று வருவதை பார்த்தும், ஆத்திரமடைந்து தடுப்பதற்காக ஒடி வந்தார். இதனையறிந்த கோவிந்தராஜ், முதியவரான தந்தையை தாக்கி, தள்ளி விட்டு, தப்பியோடி விட்டார்.
கோவிந்தராஜ் தாக்கியதில், உடம்பில் பலத்த காயம் பட்டும் ரத்தக்காயங்களுடன் இருப்பதையறிந்த தந்தை அப்பெண்ணை மீட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனநிலை பாதிக்கப்பட்ட அப்பெண் உடம்பில் பலஇடங்களில் காயங்கள் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வல்லம் போலீசில், முதியவரான தந்தை புகார் அளித்தார்.
புகாரை வழக்குப்பதிவு செய்த போலிசார் கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலிசார் கூறுகையில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண், முதியவரான தந்தையுடன் மாடு மேய்ச்சல் வருவதை கண்காணித்து வந்துள்ளார். மாடுகள் மேய்ச்சலுக்காக, பிரிந்து சென்ற போது, அப்பெண் தனியாக பிரிந்து சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமைசெய்ய முயன்றுள்ளதாக கூறினர்.