மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த எலந்தங்குடியில் நடைபெற்ற ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை புரிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லதை பாராட்டுவதும், தவறை சுட்டிகாட்டுவதுதான் அரசியல் நாகரிகம் என்றும். முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் வேண்டாம் என்று கூறிவது வரவேற்கத்தக்கது. இது, பேரவையின் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கு உதவும் எனவும்.
கொடநாடு இறப்பு கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்துவதில் தவறொன்றும் இல்லை எனவும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சியை சார்ந்துதான் வெற்றிபெற முடியும் என்பது கிடையாது. போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்பாடுகள் தான் வெற்றியை தீர்மானிக்கிறது என்றார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்த முழுவிபரங்கள் தெரியாததால், கருத்து கூற விரும்பவில்லை என்றார் மேலும் தொடர்ந்து பேசியவர் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதாக செய்தி வருகிறது. அதனை கவனத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை வேண்டும். பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படும். அதனையும் கருத்தில்கொண்டு குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும் எனவும், அதிக பயன்பாடுகளைத் தரும் பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து எப்போதும் பளபளவென ஷேப் செய்து பளீச்சென காட்சியளிக்கும் தாங்கள் தற்போது தாடியுடன் உலா வருகிறீர்களே இந்த திடீர் தாடியின் பின்னணி ரகசியம் என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சரத்குமாரின் தாடி குறித்து ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறி கொண்டுள்ள நிலையில், தனது தாடிக்கான ரகசியத்தை போட்டுடைத்தார். அது தொடர்பாக அவர் கூறுகையில் மணிரத்தினம் படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், அந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளது எனவும், அதற்காகவே தாடி வளர்த்துள்ளேன் என கூறி பலரது சரத்குமாரின் தாடி குறித்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் தொடர்ந்து பேசியவர், நான் நடிகனாக மட்டும் இருக்கிறேன், நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், தமிழில் ருத்திரன் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துகொண்டு இருக்கிறேன். பொன்னியின் செல்வன் படபிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. ஒரு மாதகாலம் ஓய்வு எடுக்க வேண்டுமென்றனர். ஆனால், ஒருவாரத்தில் நான் பணிக்கு சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நின்று விடக்கூடாது என்ற மன தைரியத்துடன் மருத்துவர் ஆலோசனையுடன் நடித்தேன். உடல் பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை கடைப்பிடித்து வருவதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன் என்றார்.
சுவாரஸ்யமான செய்திகளுக்கு...