திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரின் மனைவி சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் சிவமணி, அமுதசெல்வி, விஜயகுமார், கார் ஓட்டுநர் முத்துக்குமார் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பிரசித்தி பெற்ற திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சாமி தரிசனம் செய்தனர்.


அவர்கள் ஹோண்டா சிட்டி சொகுசு காரில் மயிலாடுதுறை சாலை மார்க்கமாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டை வழியே சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் ஹோண்டா சிட்டி சொகுசு காரின் முன் பக்க டயர் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது.


Pulwama Attack: 'புல்வாமா தாக்குதலை மோடி அரசியலுக்காக பயன்படுத்தினார்' - ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்!




அதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில்  தறிகெட்டு ஓடியது. தொடர்ந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த வீட்டின் கம்பி வலையில் சிக்கி நின்றது.  கார் மோதிய விபத்தில் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்து சாலையின் நடுவே விழுந்தது.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, காரில் பயணித்த சாந்தி மற்றும் அவரது உறவினர்களை மீட்டனர். காரில் முன்பக்கப் பகுதி மட்டுமே சேதம் அடைந்ததால், சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை மின் வாரிய ஊழியர்கள் மற்றும் செம்பனார்கோயில் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர். 


Leo Movie: லியோ படம் வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளோம்.. லாபமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சனம்..!




அப்பகுதி பொதுமக்கள் சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை ஒதுக்குப்புறமாக தூக்கி வைத்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மேலும், மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து பணியில் ஈடுபட்டு மீண்டும் புதிய கம்பத்தை நட்டு மின்விநியோகம் வழங்கினர். விபத்து நடந்த நேரத்தில் சாலை வழியை வேறு எந்த ஒரு வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக பூம்புகார் - மயிலாடுதுறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Traffic Diversion: சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா; மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம்