தஞ்சாவூர்: இருதய நுண் துளை இரத்த குழாய் மூலம் மிக சிறிய பேஸ்மேக்கர் கருவியை 75 வயது மூதாட்டிக்கு 20 நிமிடங்களில் பொருத்தி தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் இந்த மருத்துவமனையில் தான் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு திடீர் இருதய வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உறவினர்கள் அந்த மூதாட்டியை தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவர்கள் மாற்றினர்.
அங்கு அவரை பரிசோதித்த இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் அந்த மூதாட்டிக்கு இதய துடிப்பு மிக குறைவாக இருப்பதாகவும் அவசர நிலையில் ஆஞ்சியோகிராம் செய்யவேண்டும் என பரிந்துரை செய்தார். மேலும் உறவினர்களின் ஒப்புதலின்படி அந்த மூதாட்டிக்கு ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்துக்கு இரத்தம் வழங்கும் இரத்த நாளங்கள் செயலிலந்து உள்ளதை அறிந்து துரிதமாக தற்காலிக இருதய பேஸ்மேக்கர் (TPI) பொறுத்தி உயிரை காப்பாற்றினார்.
மேலும் இதயத்தின் செயல்பட்டை சரி செய்ய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையின் இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உலகத்தரம் வாய்ந்த கேத்லாப் அரங்கில் உயர் தர உபகரணங்களை பயன்படுத்தி இருதய நுண் துளை இரத்த குழாய் மூலம் மிக சிறிய நிரந்தர பேஸ்மேக்கர் கருவியானது மிக துல்லியமாகவும், குறுகிய நேரத்திலும் ரத்தக் குழாய் வழியாக இருதயத்திற்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சை 20 நிமிடங்களில் நடத்தப்பட்டது என்பதுதான் மிக குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சாதாரணமாக இரண்டரை மணி நேரம் நடத்தப்படும் இந்த சிகிச்சை அதிநவீன முறையால் 20 நிமிடங்கள் மிகவும் துல்லியமாக நடத்தி ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
இந்த பேஸ்மேக்கர் என்பது மிகவும் சிறிய வடிவம் கொண்டது, மேலும் இதில் பேட்டரி கிடையாது, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கு பின்னர் மூதாட்டிக்கு சுவாச நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இருதய துடிப்பு சீரானது. மேலும் அவருக்கு உரிய மருத்துவம் அளித்து நலமோடு வீடு திரும்பினார். தொடர்ந்து அவருக்கு ஸ்ரீ காமாட்சி மருத்துவக்குழுவினர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். தனக்கு மறுபிறவி தந்த ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன். மற்றும் மருத்துவ குழுவினருக்கு அந்த மூதாட்டி மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மிகவும் துல்லியமான பேட்டரி இல்லாத சிறிய அளவிலான பேஸ்மேக்கர் போன்ற கருவி பயன்படுத்தி இருதய சிகிச்சை அளிப்பதில் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை முன்னோடியாக உள்ளது என்பது பெருமைக்குரியது.
இருதய நுண் துளை இரத்த குழாய் மூலம் மிக சிறிய பேஸ்மேக்கர் (leadless Pacemaker) பொருத்திய விளக்கத்தை இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் நிருபர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், துணை மருத்துவ கண்கணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன் மற்றும் இருதய மருத்துவம் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் டாக்டர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.