தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் டாக்டர். எஸ். பிரபாகரனுக்கு "சர்வதேச மகாத்மா காந்தி நோபல் அமைதி விருது-2025 வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ புஷ்பம் கல்லூரி. இங்கு வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் தலைவராக பணியாற்றுபவர் டாக்டர். எஸ். பிரபாகரன்.. இவர்களுக்கு "சர்வதேச மகாத்மா காந்தி நோபல் அமைதி விருது- 2025" என்ற விருது பெரம்பலூரில் நடந்த சர்வதேச மாநாட்டில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பெரம்பலூரில் இயங்கி வரும் டி. கே. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் "பல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஐரோப்பிய உச்சி மாநாடு மற்றும் விருது வழங்கல் விழா -2025" என்ற மாநாட்டினை பெரம்பலூரில் நடத்தியது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். ரெகுநாத் பரக்கல் துணைவேந்தர், ப்ரைனி யுனிவர்சிட்டி, அமெரிக்கா, டாக்டர். கிருஷந்த பதிராஜா, இயக்குனர், கல்வி அமைச்சகம், இலங்கை, டாக்டர். ரங்கநாதா, முன்னாள் நீதிபதி, கர்நாடகா, டாக்டர். சைலேஷ்குமார் கதவுரி, டீன், பாபா யுனிவர்சிட்டி, போபால், டாக்டர். சுரேஷ் நற்பவி, இயக்குனர், யோகா சம்ஸ்கிருதம் யுனிவர்சிட்டி, அமெரிக்கா, டாக்டர். புத்தமணி துங்கனா, பூட்டான், டாக்டர் ஹசிபுல்லா முகமது, தெலுங்கானா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக இம்மாநாட்டின் சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. இம்மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இந்நிகழ்வில் 45 ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். எஸ். பிரபாகரனுக்கு "சர்வதேச மகாத்மா காந்தி நோபல் அமைதி விருது- 2025" என்ற விருதினை அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக வழங்கப்பட்டது.
இது இவர் பெரும் 119-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வினை டி. கே. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர். தினேஷ்குமார் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் நடத்தினர்.