தமிழ்நாட்டில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஞாயிறுற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வண்ணமாகவே இருந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 23 ஆயிரத்து 547 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 868 பேர் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 321 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 168 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ஒருவர் மட்டும் ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். இந்நிலையில், 3-ஆம் வார ஞாயிற்று கிழமையான நேற்று ஊரடங்கை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் காலை முதல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டனர்.
சானிடைசரை ஊற்றி தற்கொலை முயற்சி.. பிழைத்துக்கொண்ட தாய்.. பலியான குழந்தை - ஹைதராபாத் கொடுமை!
இச்சோதனையில், மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கீழவீதியில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் சோதனை செய்ததில் அங்கு நாள்பட்ட ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சைமுத்து, டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர் அப்போது அக்கடையில் 4 நாட்களான ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர்.
கடந்த வாரம்தான் பிறந்தநாள்.. இன்று அவன் இல்லை - 26 வயது மகன் தற்கொலையால் நொறுங்கிப் போன நடிகை!
இதையடுத்து அதிர்ச்சியடைந்த நகராட்சி அலுவலர்கள் ஆட்டு இறைச்சி மற்றும் குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்து அக்கடைக்கு சீல் வைத்ததுடன், ரூபாய் 5000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு நாளில் இயங்கிய டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டரை பறிமுதல் செய்து நடைவடிக்கைகள் மேற்கொண்டர். இதனை அறிந்த அக்கடையில் இறைச்சி வாங்கி வந்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.