அமெரிக்க நடிகை மற்றும் இயக்குநராக அறியப்படுபவர் ரெஜினா கிங். 51 வயதான ரெஜினா ஒன் நைட் இன் மியாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் இயான் அலெக்சாண்டரை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இயான் அலெக்சாண்டர் ஜூனியர் என்றொரு மகன் இருந்தார். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2006ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்தார்.
இந்நிலையில் ரெஜினா கிங்கின் மகன் இயான் அலெக்சாண்டர் ஜூனியர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த புதன் கிழமைதான் அவர் தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் இசையில் மிகுந்த ஆர்வமுடையவர். அவரது இந்தத் தற்கொலை ஹாலிவுட் படவுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மகனின் தற்கொலை குறித்து பேசிய ரெஜினா கிங், ”இயானின் இழப்புக்குப் பிறகு எங்கள் குடும்பம் மிக ஆழமான அளவில் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. அவர் ஒரு பிரகாசமான ஒளி, அவர் மற்றவர்களின் மகிழ்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர்” என்றார்.
முன்னதாக, தாயுடன் இருந்த அலெக்சாண்டர் ஜூனியர் ரெஜினாவுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளத்திலும் வெளியிட்டனர்.
மேலும், ரெஜினா கிங் கடந்த வருடன் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடியபோது, அலெக்சாண்டர் ஜூனியர் எழுதிய கடிதம் அவர்களுக்கிடையே இருந்த உறவை போற்றும் வகையில் இருந்தது.
அந்த வாழ்த்தில், “ எனக்காக செய்த அனைத்திற்கும் நன்றி. நீங்கள் எனது "சூப்பர் ஹீரோ" . உன்னை என் தாயாக வைத்திருப்பது நான் வைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. நிபந்தனையின்றி என்னை நேசிப்பதும் ஆதரிப்பதும் பாராட்டத்தக்க ஒன்று" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்