திருப்பாதிரிபுலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது .நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவையும் மீறி குவிந்த மக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்து உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதை அடுத்து, ஞாயிற்று கிழமையான நேற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 20-ஆம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கான கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் 21-ஆம் தேதியன்று முதல் கால ஹோமம் தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் விஸ்வரூப தரிசனமும், காலை 7 மணிக்கு கோ, அஸ்வ, கஜ பூஜைகளும், 5-ஆம் கால பூஜையும், 9.50 மணிக்கு கும்பங்கள் புறப்பாடும் 10.30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண ஏராளாமான மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை மீறி கோவிலை சுற்றி குவிந்து இருந்தனர், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க காவல் துறை சார்பில் கோவிலில் இருந்து 200 மீட்டர் சுற்றளவிற்கு மக்கள் வரமுடியாத படி தடுப்புகள் போட்டு அடைத்து இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் காவல் துறையினரின் தடுப்பு கட்டைகைளை மீறி மக்கள் உள்ளே வர தொடங்கினர், ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உள்ளே நுழைந்ததால் காவல் துறையும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
பின்னர் அனைவரும் கோயிலுக்குள் ஓட தொடங்கினர் சில மக்கள் கோயிலுக்குள் சென்று இருந்தாலும் பின்னர் காவல் துறையினர் மீது நபர்களை வெளியிலேயே நிறுத்திவிட்டனர், பின்னர் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் வெளியே இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியின் காரணமாக முந்தி அடித்து கொண்டு சுவாமி தரிசனம் கோயிலுக்குள் சென்றதை பார்க்க முடிந்தது.
தமிழக அரசு கோவில் குடமுழக்கு விழாவை நூறு நபர்கள் கொண்டு சமுக இடைவெளியோடு நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் கடலூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பபட்ட மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் தினசரி கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பல்லாயிர கணக்கான மக்கள் கூடியது மேலும் தொற்று பரவும் அபாயத்தை அதிகரித்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். பின்னர் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்து கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.