1845 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு வில்லெம் ரோண்ட்கன் ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 மார்ச் மாத்த்தில் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். 1865 இல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பொலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869 இல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
1900 ஆம் ஆண்டு வரை மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. அவரும் இவ்வாய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதை தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்கு எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார். அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று ரோண்ட்ஜென் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார்
ரோண்ட்கென் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை முதல் உலகப் போரின் போது ஏற்பட்ட வறுமை காரணமாக ரோண்ட்கென் முனிச் அருகே உள்ள வெய்தீம் என்ற கிராமத்தில் தன் இறுதி ஆண்டுகளை கழித்தார். ரோண்ட்கென் 1923 ஆண்டு பிப்ரவரி 10 அன்று குடல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பின்னர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மற்றும் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அழிக்கப்பட்டன.
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901 இல் வழங்கப்பட்டது. இப்பணப்பரிசு முழுவதையும் அவர் தனது பல்கலைக்கழகத்துக்கே வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற அவர் மறுத்து விட்டார். எக்ஸ் ரேயின் தந்தையான வில்லெம் ரோண்ட்கனின் 127 வது கண்டு பிடித்த தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக கதிரியக்க தின நிகழ்ச்சி நடைபெற்றது.
1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாமேதை வில்லெம் ரோண்டகன், கண்டறிந்த எக்ஸ்-கதிர்வீச்சின் கண்டுபிடிப்பைக் குறிக்கும் வகையில் கதிரியக்க வரைவியல் தொடர்பான ஒரு தினம் ஆண்டுதோறும் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம் 2011 ஆம் ஆண்டில் தீர்மானித்தது. ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம், வட அமெரிக்க கதிரியக்கவியல் சங்கம் மற்றும் கதிரியக்கவியல் அமெரிக்கக் கல்லூரி ஆகியவை நவம்பர் 8 ஆம் தேதியில் சர்வதேச கதிரியக்க வரைவியல் தினத்தை அனுசரிக்க முடிவு செய்தன. இது முதல் முறையாக 2012 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
இதனை முன்னிட்டு ரேடியோகிராபர் களுக்கான பணி பாதுகாப்பையும், பணி மாண்பையும், பேணிக்காப்போம் என நுண்கதிர் வீச்சாளர்கள், உறுதி மொழி எடுத்து கொண்டு,ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை நுண்கதிர் நுட்புனர் டைட்டஸ் ராஜாசிங் வரவேற்றார். மருத்துவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மருத்துவர் ஜெயந்தி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்தனர். இதில், நுண்கதிர் துறை சார்பாக செல்வராஜ், சந்திரசேகர், பார்தசாரதி மற்றும் நுண்கதிர் நண்பர்கள் இரத்த தானம் செய்தார்கள்