கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினத்தையொட்டி, கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் மொத்தம் 185 பேர் சிகை தானம் செய்தனர்.
உலக மகளிர் தினம் இன்று (08.03.2022) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ் மன்றம் சார்பில், உலக மகளிர் தினவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். சன்ஸ் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மகளிர் மேம்பாட்டு மைய மாணவியர் தலைவி ஸ்ரேயா வரவேற்றார். மகளிர் மேம்பாட்டு மையச் செயலர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். அதைத்தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்த விளங்கும் மாணவிகளுக்கு முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
அன்பா? அதிகாரமா?- பட்டிமன்றம்
அதைத் தொடர்ந்து சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்குத் தேவை அன்பா? அதிகாரமா? என்ற தலைப்பில், மகளிர் தின சிறப்புப் பட்டிமன்றம் நடுவர் கோவை சத்யா தலைமையில் நடைபெற்றது. இதில் அன்பே என்ற தலைப்பிலும், அதிகாரமே என்ற தலைப்பிலும் தலா 3 மாணவிகள் உரையாற்றினர்.
முன்னதாகப் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு உதவும் வகையில், சிகை தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் என 185 பேர் கலந்து கொண்டு சிகை தானம் செய்தனர்.
இந்த சிகை புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு செயற்கை தலைமுடி தயாரிப்பதற்காக, தனியார் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துணை முதல்வர் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் எஸ்.தீனா, செயலர் ஜி.கவிதா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும் வாசிக்க: Womens Day 2022: கும்பிடுகிறோம்.. கொண்டாடுகிறோம்... பெண்களை சமமாய் நடத்துகிறோமா...? ஒரு பார்வை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்