செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் கெங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 80). இவருடைய மனைவி பானுமதி (70). இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தினால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தங்களுடைய உறவினரான தம்பி மகனைத் தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். தத்து எடுத்து வளர்த்து ஒரு மகனின் பெயர் ஜெயராமன் அவருக்கு வயது 35 . ராமலிங்கம் மற்றும் பானுமதியை ஜெயராமன் தான் கவனித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ராமலிங்கம் முடக்குவாதம் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக முடக்குவாத நோயால் படுத்த படுக்கையாக கிடந்த ராமலிங்கம், திடீரென உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறவினர்கள் ராமலிங்கத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்தனர்.
கணவர் நோய்வாய்பட்டு உயிரிழந்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோன பானுமதி, தன்னை இந்த வயதிலும் உயிருக்கு உயிராக நேசித்து வாழ்ந்த கணவர் ராமலிங்கத்தின் மரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவர் தன்னைவிட்டு பிரிந்து விட்டாரே என்ற துயரத்தில் கணவரின் உடல் அருகே அழுது கொண்டிருந்த பானுமதியும் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பானுமதியை மயங்கி விழுந்த தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக பானுமதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பானுமதியை சோதித்த மருத்துவர்கள் வழியிலேயே பானுமதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இத்தகவலை கேற்று உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரின் உடல்களையும் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று வளர்ப்பு மகன் ஜெயராமன் இறுதிச்சடங்குகளை செய்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்பத்தியது. மரணத்திலும் இணைபிரியாமல் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அன்பிற்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
‛அவரை என்னனு நெனச்சீங்க...’ வார்னருக்காக வரிந்து கட்டி களமிறங்கிய மனைவி!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.