தமிழ்நாடு:


கோவை சின்மயா வித்யாலயாவில் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அப்பள்ளியின் முதல் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.


கனமழையால் கன்னியாகுமரி வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.


கோவை சம்பவத்தை அடுத்து கரூரில் பிரபல மருத்துவர் தனது ஊழியர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்சோ சட்டம் பதிவாகியுள்ளது.


நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுமென பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்தவொரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


 


இந்தியா:


உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.


நடிகர் சோனு சூட்டின் மாளவிகா அரசியலுக்கு வரப்போவதாக சோனு சூட் இன்று அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய, வசதியான ஆடைகளை அணியலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. 


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.


ராணுவ தளபதி முகுந்த் நரவானே 5 நாள் அரசு பயணமாக இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார்.


 


சினிமா:


ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி பெயரில் நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.


தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.


குக் வித் கோமாளி புகழுக்கு பிறந்தநாளையொட்டி அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.


ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து அவரது குணத்தை தீர்மானிக்க கூடாது என அஜித் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.


கேல்ரத்னா விருதுக்கு தகுதியானவர் நீங்கள்தான் என மிதாலி ராஜுக்கு டாப்ஸி வாழ்த்து கூறியுள்ளார்.


 


விளையாட்டு:


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நடக்கும் சூழலில் நானும், கேன் வில்லியம்சன் ஆகிய இருவருமே வெற்றியாளராக இருப்போம் என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.


தேசிய கிரிக்கெட் அகாடெமியின் புதிய இயக்குனராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


எனது பெர்பாமன்ஸ் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று நன்கு தெரியும். என்னிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளாதீர்கள். நான் கிரிக்கெட்டுக்கு மிக உயர்ந்த அளவில் சேவை செய்ய விரும்புகிறேன் என பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஹசன் அலி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவைவிட நெய்மர் டெக்னிக்கலாக சிறந்த வீரர் என பிரேசில் அணியின் முன்னாள் வீரர் காஃபூ தெரிவித்துள்ளார்.


 


உலகம்:


ஈக்வடார் நாட்டின் சிறையில் நடந்த மோதலில் 58 பேர் உயிரிழந்தனர்.


நேபாளத்தில் நடந்த விபத்தால் கார் ஒன்று குளத்தில் மூழ்கியது. அதில் இருந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.


கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என ஸ்வீடன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


 


குற்றம்:


பூவிருந்தவல்லியில் மனைவியை அடித்து கொன்ற கணவன் 3 குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.


பெருந்துறை நிதிநிறுவன மோசடி வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை சிறப்பு பொருளாதார பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.


வேலை வாங்கி தருவதாக தெலங்கானாவில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.


500 ரூபாய்க்கு சில்லறை தராத கடைக்கு மது போதையில் வந்த ஒருவர் தீ வைத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


டெக்னாலஜி:


ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதியை அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ளது.


ட்விட்டர் தளத்தில் பதிவேற்றப்படும் படங்களை இனி தானாக `க்ராப்’ செய்யப் போவதில்லை எனவும், `க்ராப்’ செய்யப்படாமல், படங்களை முழுவதுமாகப் பார்க்க முடியும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


நிலவில் 800 கோடி மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


வீடியோவை டிஸ் லைக் செய்தவர்களின் எண்ணிக்கையை இனி பார்க்க முடியாதபடி யூட்யூப் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண