வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் கூறும் போது, “ தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 29 ஆம் தேதி தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். 30 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
சென்னையில் நிலவரம் எப்படி?
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
25 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சியாக நடைபெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
'அதிகளவு மழை பதிவான இடங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சூலூரில் 3 செ.மீ மழை பெய்துள்ளது.நீலகிரி மாவட்டம் குந்தாபாலம் , கோயம்புத்தூர் விமான நிலையம் திருப்பூண்டியில் தலா 2 செ.மீ மழையும், கொடைக்கானல், ஆழியாறு, வேளாங்கன்னி, மன்னார்குடி, நீலகிரி மாவட்டம் கின்ன கோரை, சாம்ராஜ் எஸ்டேட், லாஞ்சியில் தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்