விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக விழாக்காலங்கள் என்றாலே காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகளவில் எகிறிவிடும்.


இந்த நிலையில், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பூக்களின் விலை எகிறியுள்ளது. வழக்கமாக விற்கும் விலையை காட்டிலும் மூன்று மடங்கு பூக்களின் விலை ஏறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.




கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் இன்று சம்பங்கி பூ கிலோ ரூபாய் 300க்கு விற்கப்படுகிறது. செவ்வந்தி பூ கிலோ ரூபாய் 180க்கு விற்கப்படுகிறது. ரோஜா கிலோ ரூபாய் 200க்கு விற்கப்படுகிறது. கிரேந்தி பூ கிலோ ரூபாய் 50க்கும், கிரேந்தி சிவப்பு கிலோ ரூபாய் 40க்கும், சிவப்பு அரளி ரூபாய் 330க்கு விற்கப்படுகிறது.


மேலும் படிக்க : Onam Festival : ஓணம் வந்தல்லோ.. ஓணம் பண்டிகையை பத்தியும், மகாபலி சக்கரவர்த்தியையும் தெரியுமா?


அதேபோல, நேற்று தோவாளையில் கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று மல்லி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ நேற்று கிலோ ரூபாய் 550க்கு விற்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிச்சப்பூவும் இன்று விலையேறியுள்ளது.




பூக்களின் பிரதான சந்தைகளான தோவாளை மற்றும் மதுரையில் விலை ஏறியுள்ளதால் கோயம்பேடு சந்தையிலும் பூக்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் இன்று காலை நிலவரப்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 800 விற்கப்படுகிறது. முல்லைப் பூ ரூபாய் 600 விற்கப்படுகிறது. ஜாதிமல்லி ரூபாய் 450 கிலோவிற்கு விற்கப்படுகிறது. சம்பங்கி கிலோ ரூபாய் 150க்கு விற்கப்படுகிறது, ரோஜா கிலோவிற்கு ரூபாய் 160 முதல் ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. மதுரையில் ஒரு கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு முழம் மல்லிப்பூ ரூபாய் 60 முதல் 80 வரை விற்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க : 32 Forms of Ganesha: பிள்ளைகள் கொண்டாடும் பிள்ளையார்.. விநாயகரின் 32 அவதாரங்கள்..! என்னென்ன தெரியுமா?


மேலும் படிக்க : Famous Vinayagar Temples: தமிழ்நாட்டில் கண்டிப்பாக வழிபட தவறவிடக்கூடாத விநாயகர் ஆலயங்கள் பற்றி தெரியுமா?