கோல் ஊன்றி நடக்கும் நிலை வந்தாலும் ஊமை மக்களுக்காக பாடுபடுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கம். விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருக்கோவிலூர் விக்ரவாண்டி விழுப்புரம் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர்  ராமதாஸ்:-


அதிமுகவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே வைப்போம் என கண்டிப்பாக தெரிவித்ததாகவும் அதன் பேரில் தான் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்குவதற்கு முக்கிய காரணமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இருந்தார் என புகழாரம் தெரிவித்தார்.




தமிழகத்தில் எந்தக் கட்சித் தலைவர்களும் மக்களுக்காக அதிக அறிக்கை வெளியிடாத நேரத்தில் மக்களுக்காக அதிக அறிக்கை வெளியிட்ட ஒரே கட்சி பாமக என்னும் பாட்டாளி மக்கள் கட்சி. தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் சுப்பராயலு முதல் மு.க ஸ்டாலின் வரை ஒருவர்கூட வன்னியர்கள் இல்லை காரணம் வன்னியர்கள் எடுபுடி என மருத்துவர் ராமதாஸ் கூறினார்.


தமிழகத்தை ஆள பாமகவிற்கு ஒரே ஒருமுறை வாய்ப்பளியுங்கள் எனவும் தேர்தல் நேரத்தில் விளையாடுகின்ற பணத்தினால் தான் வன்னியர்கள் பாழாகி போகிறார்கள் என கூறினார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தடை உத்தரவு வாங்குவதற்கு நீதிமன்றம் சென்றுள்ளோம் விரைவில் தடை உத்தரவு கிடைக்கும் 10.5 சதவீதத்தை பெற்றே தீருவோம் என உறுதி கூறினார்.




“காசு தான் கடவுள் என்பது கடவுளுக்கே தெரியும்” இனி வன்னியர்கள் காசுக்கு மயங்கக் கூடாது குறிப்பாக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது. வாக்குகள் சிந்தாமல் பெற திண்ணைப் பிரச்சாரம் சமூக ஊடகப் பிரச்சாரம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும், இனி இங்கு காசுக்கு வேலை இல்லை. நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் பாமக விழுப்புரத்தில் 42 வார்டுகளிலும் போட்டியிட உள்ளதால் பாமகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும் வெற்றி பெற்றபின் எட்டு திக்கும் கொட்டும் முரசு கொட்ட தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


கழுத்து வலி, கால் வலி, முட்டி வலி, இருந்தும் ஏன் கோலூன்றி நடந்தாலும் என் உறுதி இறுதி மூச்சு உள்ளவரை இந்த ஊமை ஜனங்களுக்காக பாடுபடுவேன் எனக் கூறினார். இனி ஒரு விதி செய்வோம், அதை எந் நாளும் காப்போம், என நிர்வாகிகளை உறுதி மொழி ஏற்க வைத்து ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்தார்.


 


மேலும் படிக்க...


 


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


 


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


 


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


 


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


 


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


 


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


 


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண