தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள உள்ளனர். இந்த நிலையில், இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். நீதிபதியின் விமர்சனம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனிநீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்திருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி விதித்து வணிகவரித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விஜய் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும், சமூக நீதிக்காக பாடுபடும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல. நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்ப என்றும் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நடிகர் விஜய் எஞ்சிய வரியை செலுத்தினார். அதேசமயத்தில் அவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் ரூபாய் 1 லட்சம் அபராதத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் விஜய் மீதான எதிர்மறை கருத்துக்களையும் நீதிமன்றம் நீக்குவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க : Akhanda Screening: பாலைய்யாவுக்காக ஒன்று கூடிய கிராமம்! தியேட்டராக மாறிய மைதானம்! ஃபையர் விட்ட கிராம மக்கள்!
மேலும் படிக்க : February 2022 OTT release: பிப்ரவரி மாதம் ஓடிடியை தெறிக்கவிடப்போகும் 5 திரைப்படங்கள் என்னென்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்