டோலிவுட் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி இப்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு, டோலிவுட்டில் கலெக்ஷனை அள்ளிய அகண்டா, ஹிட் படமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் ஒரு கிராமமே அகண்டா திரைப்படத்தை பார்த்த செய்திதான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
போயாபத்தி சீனு இயக்கத்தில், பாலைய்யா, பிரக்யா ஜஸ்வால், ஜகபதி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. பெரிய பொருட் செலவில் உருவான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் 150 கோடி வசூல் செய்ததால் ஹிட் படம் அறிவிக்கப்பட்டது.
திரையரங்குகளில் வெளியானபோதே சமூகவலைதளத்தில் டிரெண்டான அகண்டா, ஓடிடியில் வெளியாகி இருப்பதால், மீண்டும் ஒரு முறை டிரெண்டானது. பாலையாவுக்கும், பாலைய்யாவின் ஸ்டைலுக்குமெனெ தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், இதில் இருந்து என்னென்ன டிரால் செய்யலாம் என நெட்டிசன்கள் ஆர்வத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலை, ஆந்திராவுக்கு வெளியேதான் என்பதால், ஆந்திராவில் நடப்பதோ வேறு. ஒட்டுமொத்த கிராமமே பொது மைதானத்தில் அகண்டா படத்தை பார்த்து ரசித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த சூழலில், தொற்று குறைய வேண்டும் என்பதற்காகவே திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி என நடைமுறை கொண்டு வரப்பட்டது.
ஆனால், மக்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து படம் பார்த்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பதால், விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. இது பாலைய்யா படத்திற்கு கிடைத்த வெற்றி என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்