தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகிறது.


விஜய் மக்கள் இயக்கம்:


அண்மை காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு வந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்தில் இசை வெளியீட்டு விழா அல்லது நிகழ்ச்சியில் அரசியல் குறித்த கருத்துக்க்ளை சூசகமாக கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று லியோ படத்தின் நான் ரெடி என்ற பாடல் குறித்த  அப்டேட் வெளியானது. இதில் நான் ரெடி என குறிப்பிடப்பட்டிருந்ததை பலரும் அவர் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறார், விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.


இது போன்ற சூழலில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.  


மாணவர்களுடன் சந்திப்பு:


நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்க உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் “மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக நீலாங்கரையை அடைந்து விடுவார்கள். அனைவருக்கும் நொறுக்குத்தீணி, தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.




உணவுப்பட்டியல்:


இந்த விழாவில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் சிறப்பான முறையில் சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய உணவு விருந்தில், மமாங்காய் ஊறுகாய், ஐஸ்கிரீம், இஞ்சி துவையல், ஆனியன் வெள்ளேரி தயிர் பச்சடி, கதம்பருப்பு, பொரியல், உருளை பட்டாணி வறுவல், சௌ சௌ கூட்டு, காலிஃப்ளவர் பக்கோடா, வெஜ் புலாவ், காரக்குழம்பு, மாங்காய் முருங்கை சாம்பார், தக்காளி ரசம், அடை, ஆனியன் வடை,  அப்பளம், மற்றும் மோர் பரிமாரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.


Vijay Makkal Iyakkam: ” தளபதி விஜய் கல்வி விருது” தடபுடலான ஏற்பாடு..! விழா மேடையில் யார் ஃபோட்டோ தெரியுமா?


மேட்டூர் அணையின் நீர் வரத்து 406 கன அடியில் இருந்து 651 கன அடியாக அதிகரிப்பு