திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ராமநாதபுரம் தூத்துக்குடி தஞ்சாவூர் திருவாரூர் அரியலூர் புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் மதுரை விருதுநகர் நெல்லை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மண்டபம் மாமல்லபுரத்தில் ஆயில் இடங்களில் 11 சென்டிமீட்டர் சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மன்னார் வளைகுடா தென் மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக தாமதம் ஆகிய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகி வடமேற்கு திசையில் நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து நான்காவது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திருவாரூர் நகர் பகுதியில் ஏராளமான இடங்களில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். திருவாரூர் அருகே பழவனக்குடி ஊராட்சியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள மக்களை  பாதுகாப்பாக அருகிலுள்ள கோயிலில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ரோட்டரி கிங்ஸ் அமைப்பின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளனர். மேலும் தொடர் கனமழையால் திருவாரூர் பெரும்புகலூர் ஊராட்சியில் இரண்டு வீடுகளும் தியாகராஜபுரம் ஊராட்சியில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.



மேலும் தொடர் கனமழையால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணியை மீண்டும் தொடர வேண்டும், அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கின் மூலம் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.