வேலூர் சி.எம்.சியில் நடைபெற்ற ராகிங் தொடர்பாக ஏற்கனவே 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 மாணவர்கள் கண்டறியப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இத்தகவலை இதுதொடர்பாக விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி. விளக்கம் அளித்துள்ளது. ராகிங்கைத் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக சி.எம்.சி. கல்லூரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.


வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  


Kanyakumari holiday: கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை... காரணம் இதுதான்!


இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக காவல் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது" என்று தெரிவித்தது.


இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார், இடைநீக்கம் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.