நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக என பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 டவுன் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் களைகட்டி வருகிறது. 




மேலும் படிக்க:Local Body Election | நான் ஜெயித்தால் டாஸ்மாக் கடையை அகற்றுவேன் - கோயிலில் வாக்குறுதி அளித்த அதிமுக பெண் வேட்பாளர்




இந்த நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு  பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 3 மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: TASMAC Bar: அரசு டாஸ்மாக் கடைகளில் பார்கள் எதற்கு? - இழுத்து மூடுங்கள்! - கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்




முன்னதாக, சமீபத்தில் டாஸ்மாக் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு தடை சட்டம் 1937-ன்படி டாஸ்மாக் கடைகளுக்கு அங்கு விற்பனை செய்யும் மதுபானங்களை அந்த கடைகளுக்கு அருகே பார் அமைத்து பருக அனுமதி அளிக்க உரிமையில்லை. அத்துடன் அந்த பார்களில் ஸ்நாக்ஸ் விற்க மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுக்க உரிமம் அளிக்கவும் அனுமதியில்லை. மேலும் இந்த பார்கள் அனைத்தும் தனியார்களுக்கு உரிமத்துடன் தரப்படுவதால் அதன் மீது டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆகவே இந்த பார்களை 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 




Vijayakanth: டாஸ்மாக் பார்களை மூட நீதிமன்றம் உத்தரவு: விஜயகாந்த் வரவேற்பு




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண