தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக என பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 டவுன் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் களைகட்டி வருகிறது. 


இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் மாநில தலைவர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசானை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


அப்பொழுது, தேர்தலுக்கு முன்னதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஆரல்வாய்மொழி டவுன் பஞ்சாயத்து மாதவன் பிள்ளை - வார்டு 2 . இரணியல் டவுன் பஞ்சாயத்து - வார்டு 12-ஐ சேர்ந்த ஸ்ரீகலாவை அழைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வெற்றிபெற்ற சான்றிதழையும் வழங்கினர். 






 


அதன்பிறகு அண்ணாமலை பேசுகையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக உள்ளது. அப்படி பொய் பேசித்தான் ஆட்சியும் திமுக அரசு கைப்பற்றியது. கடந்த 80 ஆண்டுகளாக ஆட்சி செய்தால் எப்படி மக்களிடம் வெறுப்பு ஏற்படுமோ கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலையே நிலவி வருகிறது. 


திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ஊழல்வாதிகள். திமுகவின் என்னும் ஆக்சிஜனை சுவாசித்து கொண்டுதான் காங்கிரஸ் கட்சி இன்னும் தமிழகத்தில் உயிர் வாழ்ந்து வருகிறது என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண