கொரோனாவின் இரண்டாவது அலை ஓய்ந்ததை அடுத்து நிலைமை சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென ஒமிக்ரான் வைரஸ், கொரோனா மூன்றாவது அலை என உருவானதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, தினசரி இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்தது.
மேலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தக கண்காட்சிக்கும் கொரோனா காரணமாக தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இந்தச் சூழலில் வைரஸ் பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் ஆறாம் தேதிவரை புத்தக கண்காட்சியை நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு டிக்கெட் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, புத்தகங்கள் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக புத்தக கண்காட்சியை விரைந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் பபாசி அமைப்பினர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !