தருமபுரி மாவட்டம், மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
மனோகரன்(57), சரவணன்(50) ஆகிய இருவரும் முன்னதாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
திருவிழாவின் முக்கிய நாளில் நடந்த சோகம்
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கோயில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று (ஜூன்.13) தேர் ஊர்வலம் நடைபெற்றது.
மேலும் படிக்க: P Chidambaram Health: போராட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம்..! போலீசார் தள்ளியதில் எலும்பு முறிவு..!
அப்போது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்தபோது தேர் விழுந்ததில் ஐந்து பேர் சிக்கிக் கொண்டனர்.
ஐவர் காயம்
இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது மேலும் மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இருவரது குடும்பத்தாருக்கும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Kavitha Ramu IAS: முதல்வருக்கு கிறிஸ்துவ புத்தகம் கொடுத்த கலெக்டர்! சூடான பாஜக! பதிலுக்கு 'அர்த்தமுள்ள இந்து மதம்'
சென்னை சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்..? - ஆளுநர் தமிழிசை விளக்கம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்