காவல்துறையை முதல்வர் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லையென்றால் இவர்கள் ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும்  என திருவாரூரில் டிடிவி தினகரன் பேட்டி  அளித்துள்ளார். 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கோயில் திருமாளம் பகுதியில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணைச் செயலாளர் கல்யாண சுந்தரம் மகன் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோரின் திருமணத்தை  கோவில் திருமாளம் கள்ள நாதர் திருக்கோயிலில்  நடத்தி வைக்க வருகை தந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கடந்த இரண்டு மாதங்களில் பல லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. வெற்று விளம்பரங்களை விட்டுவிட்டு காவல்துறையை முதல்வர் முதலில் அவர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லையென்றால் இவர்கள் ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும்.


மேகதாது அணை விவகாரத்தில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறித்த கேள்விக்கு.. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கை. எப்போது காவிரி பிரச்சனை வந்தாலும் திமுக கோட்டை விடும். இம்முறை கோட்டை விடாமல் மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் அணையை கட்டவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்நாட்டு மக்களும், அனைத்து கட்சியினரும் ஆதரவாக இருப்பார்கள். 




ஆளுநர் தமிழக ஆளுநர் சனாதனம் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு பக்தியில் உள்ளவர்களே சனாதனம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் விஷயமாக இருக்கும் போது  அரசியல்வாதிகளே அதைப்பற்றி பேசுவதில்லை. அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பேசியிருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து. அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அதில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.


சசிகலாவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு அதிமுகவின் தற்போது நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு காலம் பதில் சொல்லும். நான் ஜோசியக்காரனும் அல்ல, அரசியல் வல்லுநரும் அல்ல சாதாரண அரசியல்வாதி. 




திமுக பிராமணர்களுக்கு எதிராக செயல்படுகிறது என சுப்பிரமணிய சுவாமி கூறியது பற்றிய உங்களது கருத்து குறித்த கேள்விக்கு திமுக எல்லாருக்கும் எதிராக செயல்படுகிறது. மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என ஸ்டாலின் சொல்வது நம்மை போன்ற திராவிடர்களாக பிறந்த அனைவருக்கும்  தலைகுனிவு. ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் அனைவருமே எதிர்கட்சிகள் தான். அதிமுகவும் எதிர்கட்சியாகத்தான் செயல்படுகிறது. ஆனால் மடியில் கனம் இருப்பதால் பயத்துடன் செயல்படுகிறது.