P Chidambaram Health: போராட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம்..! போலீசார் தள்ளியதில் எலும்பு முறிவு..!

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை போலீசார் தள்ளியதில் அவரது இடதுகையின் விலா எலும்பு முறிந்தது.

Continues below advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் ப.சிதம்பரம். நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜரானார்.

Continues below advertisement

 

ராகுல்காந்தியை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளுவின்போது ப.சிதம்பரத்தை போலீசார் தள்ளியதில் அவரது இடது கையின் விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement