காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் 5 மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிது நேரம் முடங்கி இருந்தநிலையில் பிறகு அந்த ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. 


டெல்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ, பெற்றோர், குடும்பதினரின் புகைப்படமோ சமூகவலைதளங்கள் அல்லது பத்திரிக்கைகளில் வெளியிட கூடாது.


இமாச்சல் நிலச்சரிவு..பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!






இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரந்தீப் சுர்ஜ்வாலா, முன்னாள் அமைச்சரும் பொதுச் செயலாளருமான அஜய் மக்கென், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஆகியோரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பு துறையின் செயலாளர் வினீத் பூனியா, “காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் எங்களைத் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார். 


SP Velumani: 'பட வாய்ப்புத் தேடி சென்னை சென்ற எஸ்.பி.வேலுமணி' பல கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி? – முழு பின்னணி