இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியை இணையவழியில் சென்னை மெட்ரோ நிர்வாகம் நடத்துகிறது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை (Azadi ka Amrut mahostav) கொண்டாடிடும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் உடன் இணைந்து 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கான "இந்தியா 75 இளைஞர் மாநாடு” மற்றும் சென்னை தினத்தை (22.08.2021) கொண்டாடிடும் வகையில் "சென்னை காட் டேலட்" போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை இணையவழியில் நடத்தவுள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் சென்னை காட் டேலண்ட் (Chennai Got Talent) ஆகியவற்றுக்கான பதிவுகள் தடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான பதிவுகள் 12.08.2021, வியாழக்கிழமை முடிவடைகிறது மற்றும் சென்னை காட் டேலண்டிற்கான பதிவுகள் 15:062021, ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. "இந்தியா - 75 இளைஞர் மாநாடு" போட்டி 12.08.2021, வியாழக்கிழமை நடைபெறுகிறது
மேற்கூறிய போட்டிகளில் பங்குப்பெற விருப்பம் உள்ளவர்கள், பதிவு செய்ய மற்றும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்,
* பள்ளிகளுக்கு இடையிலான போட்டிக்கு, https://yiyuva.in/schools/ என்ற இணைப்பையும், "இந்தியா 75 இளைஞர் மாநாடு" போட்டிக்கு http://youngindians.glueup.com என்ற இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டும்.
சென்னை காட் டேலண்ட்' - போட்டியில் பதிவு செய்ப மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்ய https://yiyuva.in/cgt என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைய வழியில் நடைபெறும் இந்த போட்டிகளில் அதிக அளவில் பங்குப்பெற்று திகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு,அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
Covid cases | 5 நாட்களில் 250 சிறுவர்களுக்கு கொரோனா.. அச்சமூட்டும் பெங்களூரு..!
ப்ரெய்ன் ட்யூமர் அறுவை சிகிச்சை : பேசச்சொன்ன மருத்துவர்கள்.. காயத்ரி மந்திரம் பாடிய நோயாளி..!
Sachin | சச்சினோடு நடந்த சம்பவம்.. இந்தியா வரமுடியாதுன்னு பயந்தேன்- மனம்திறந்த சோயப் அக்தர்