குறைந்து வரும் கோவிட் தொற்றினை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கோவிட்-19 தொற்று சிகிச்சைக்கான கட்டணம் நாளொன்றுக்கு (Per Day Cost) என்ற கட்டணத்திலிருந்து தொகுப்பு கட்டணமாக (Package Cost) மாற்றி
அமைக்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


இதற்கான அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன். ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது. 


உலக சுகாதார அமைப்பு தற்போதுள்ள கோவிட் தொற்று பாதிப்பினை உலகளாவிய பொதுசுகாதார பேரிடராகவும், இது கட்டுப்படுத்தக்கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடன் பெருவாரியாக பரவும் தொற்றுச்சட்டம் 1897-ன் படி வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் வழிகாட்டு பேரிடர் மேலாண்மைச்சட்டம் 2005-இன்படியும், கோவிட்-19 தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிகாட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.




மேலே படிக்கப்பட்ட அரசாணையில் மக்கள் நலன் காத்திடவும். கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடவும், கோவிட்-19 சிகிச்சைக்கான சிகிச்சைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது, அதிகரிக்கப்பட்ட கட்டணத் தொகையானது மாதங்களுக்குள் தொற்றின் தன்மைக்கேற்ப மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.






தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தில் 12.07.2021 அன்று நடைபெற்ற உயர்மட்ட சிறப்பு குழு கூட்டத்தில் மேலே படிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டவாறு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கான அதிகரிக்கப்பட்ட தொகையானது இரண்டு மாதங்களுக்கு பின்பு தொற்றின் தன்மைக்கேற்ப கட்டணத்தை மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது என தெரிவித்து உயர் மட்ட சிறப்பு: குழு கூட்டத்தின் தீர்மானங்களின் படி கருத்துருவினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளார். 


மேற்காணும் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு பரீசீலனை செய்து கீழ்கண்டவாறு ஆணையிடுகிறது.
காப்பீட்டுத் திட்டம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து அரசாணை (நிலை) எண்.251, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, நாள் (22.05.2021)ல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன.அதன்படி, நகர அடுக்குகளின் அடிப்படையில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கான கூடுதல் கட்டணம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி கட்டணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் கோவிட்-19 தொற்றுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் கட்டணத்துடன் நாளொன்றுக்கு பாதுகாப்புக் கவசம்  உயர்தர மருந்துகள் மற்றும் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.D-Dimor, LDH, IL6 போன்ற பரிசோதனைகளுக்கான கூடுதல் கட்டணம் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக வழங்கப்படும் கோவிட் சிகிச்சை பெறுவதற்கான உயர்தர மருந்துகளுக்கு கூடுதல் கட்டணம் இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதலாக வழங்கப்படும். கோவிட் சிகிச்சை பெறுவதற்கான அரசு மருத்துவரின் பரிந்துரைப் படிவம் (Referral form) தேவையில்லை என்கிற நடைமுறை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தொடரும் எனவும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.