TN Transportation Dept: பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நடத்துனர்கள் தூங்கவும், செல்போன் பயன்படுத்தவும் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. மீறினால் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நடத்துனர்கள் தூங்குவதாகவும், செல்போன் பயன்படுத்துவதாகவும் போக்குவரத்து துறைக்கு பயணிகள் அளித்துள்ள புகாரினை அடுத்து இந்த எச்சரிக்கை  தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சகட்த்தி சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. 


நடத்துனர்கள் எப்போதும் பேருந்தின் இரு படிக்கட்டுகளையும் கவனிக்க வேண்டும் எனவும், நீண்ட தூர வழித்தடங்களின்போது ஓட்டுநர்களுக்கு பக்கபலமாக அமர்ந்து பணி செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்புக்கு அடுத்து நடத்தப்படும் பரிசோதனையில் நடத்துநர்கள் அறிவுறுத்தலை பின்பற்றாமல் இருந்தால் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்ப்ட்டுள்ளது. 


விஜய் சேதுபதியுடன் ரிகர்சல்.... புகைப்படம் பகிர்ந்த கத்ரீனா கைஃப்!






திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே போக்குவரத்து துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களும், திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், திமுக தனது தேர்தல் பரப்புரையில் ஏற்கனவே சொன்னதுபோல், தமிழ் நாடு முழுவதும் மாநகரப் பேருந்தில் பெண்கள்  கட்டணமில்ல பயணத்தினை மேற்கொள்ள சட்டம் இயற்றப்பட்டது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரி ஒருவரை சாதியின் பெயர் சொல்லி திட்டியதால், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக துறை மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் போக்குவரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிவசங்கர் வந்த பிறகு போக்குவரத்து துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பயணிகளை மிகவும் மரியாதையாக நடத்திட அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தற்போது வழங்கியுள்ள் அறிவுரை நீண்ட தூர வழித்தடங்களில் ஓட்டுநர்கள் உறங்காமல் இருக்கவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.