அதிமுகவில் அதிகார போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட 10 முன்னாள் அமைச்சர்களை ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.




அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்:


சில தினங்களுக்கு  முன்பு ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை தொடர்ந்து இபிஎஸ் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 


பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்


செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க, வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும், பிரதமர் சந்திக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுக நிலவி வரும் பிரச்னை குறித்து பேச இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, அலுவலகத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்து மூடினர்.


 






அதிமுக தலைமை அலுவலத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைடுத்து, கட்சியின் தலைமையகம் பழனிசாமியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 


இதனிடையே, அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ஓ.பி. ரவீந்திரநாத்தை அதிமுக பிரதிநிதியாக கருத வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை ஏற்க வேண்டாம் என ரவீந்திரநாத்தை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண