Breaking Live | உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

BREAKING News Live Today In Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

ABP NADU Last Updated: 18 Nov 2021 11:04 AM
நாளை 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

நாளை 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 


 புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

ஊரடங்கை நவ.30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
 


தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

கனமழை - தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அழைப்பு

புதுச்சேரியில் மழை தீவிரமடைவதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அழைப்பு; இன்று காலை முதல் 5 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது - மாவட்ட ஆட்சியர்

8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுக - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுற்றுலா மையங்களை இணைக்கும் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்


பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுக - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுற்றுலா மையங்களை இணைக்கும் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்


பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நெல்லை, திருச்சி, வேலூர் எஸ்.பி.க்கள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள் மாற்றம் 


கோவை மாநகர காவல் ஆணயைராக பிரதீப்குமார் ஐபிஎஸ் நியமனம் 

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் ’சிலம்பம்’சேர்ப்பு

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் ’சிலம்பம்’சேர்ப்பு


அரசாணை வெளியீடு

சூர்யாவை உதைக்க வேண்டும் என்று சொன்னவரை வேண்டுமானால் உதையுங்கள் - சீமான்

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவை உதைக்க வேண்டும் என்று சொன்னவரை வேண்டுமானால் உதையுங்கள்; நான் பணம் தருகிறேன் - சீமான்



‘அக்னி கலசம்’ முத்திரையை படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம் - சீமான்


ரொம்ப கஷ்டமா இருக்கு ; நிறைய பிரச்னை கொடுக்குறாங்க...! - சிம்பு


திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் அனுமதி என அரசு தகவல்


இந்த ஒரு செமஸ்டர் தேர்வை நேரடியாக நடத்தாமல், ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் - இ.பி.எஸ்.


இந்த ஒரு செமஸ்டர் தேர்வை நேரடியாக நடத்தாமல், ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் - இ.பி.எஸ்.


சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும்

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது 

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - வானிலை ஆய்வு மையம்

Breaking News Live: மயானப் பணியாளர்களும் இனி முன்களப் பணியாளர்கள்தான் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மயானப் பணியாளர்களும் இனி முன்களப் பணியாளர்கள்தான் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Tamil Nadu Rain Latest News: ஏற்கெனவே 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ராணிப்பேட்டைக்கும் ரெட் அலர்ட்

ஏற்கெனவே 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ராணிப்பேட்டைக்கும் ரெட் அலர்ட்(Red Alert)

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

Tamil Nadu Rains: அதிகனமழைக்கு வாய்ப்பு - 6 இடங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Nadu Breaking News: மயான பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிப்பு

கொரோனா காலத்தில் பணியாற்றும் மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு

TN Weather News Today: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது - வானிலை ஆய்வு மையம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு

  • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு – புகார் அளித்தபோதே முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும் மனு

பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை

  • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை – விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Background

BREAKING News Live: 


சென்னையை தொடர்ந்து, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் தேங்கும் இடத்தில் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும், 044 - 25619204, 044 - 25619206, 044 - 25619207, 044-25619208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.