தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதியிலிருந்து மே-4 ஆம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.


தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 30 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இம்மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் வாரம் வரை வெப்பநிலை குறைவாகவே இருக்கும் என்றும் மழை அறிவிப்புகளை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 


மழை நிலவரம்


கடந்த 24 மணி நேரத்தில் நாங்குநேரி,  அதிராம்பட்டினம், பெருஞ்சாணி அணை,  புத்தன் அணை, பாளையங்கோட்டை, தாளவாடி, சிறுவாணி அடிவாரம், குருந்தன்கோடு ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


சென்னை வானிலை மையம் அறிவிப்பு:


27.04.2023


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  


28.04.2023


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 






 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

பெய்யக்கூடும். 




30.04.2023


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


01.05.2023:


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.




மேலும் வாசிக்க..


Vikram on Dhoni: நான் கிரிக்கெட் பார்க்க காரணம் இவர் மட்டும்தான்.. மனம் திறந்த ஆதித்த கரிகாலன்..!


Ponniyin Selvan 2: ’என்னம்மா நீ இப்படி இருக்குறீயேமா’ ... ஐஸ்வர்யா லட்சுமியை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி..!