மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர்

 

சென்னை, துரைப்பாக்கம் அடுத்த உத்தண்டி பகுதியில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆறு பெண்களை மீட்ட காவல்துறையினர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சென்னை துரைப்பாக்கம் அடுத்த உத்தண்டி பகுதியில் ஸ்பா என்ற பெயரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் ரகசியமாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியாகியது.

 

6 பெண்களை வைத்து பாலியல் தொழில்

 

இதனைத் தொடர்ந்து தாம்பரம் கமிஷனர் உத்தரவின் பேரில் விபச்சாரத் தடுப்புப் பிரிவுப் போலீஸார் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு, திருச்சியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்பாவில் 6 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்ததுள்ளது. இந்தநிலையில் அந்தப் பெண்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி, கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

 

புழல் சிறையில் அடைத்தனர்

 

இந்த வேலைகளைச் செய்வதற்காக உரிமையாளர் குமார், உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஆசிப் (35) என்பவரை மேலாளராக நியமித்துள்ளார். கர்நாடகா, உத்தரபிரதேசம், தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதில் ஆசிப்பை போலீஸார் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான உரிமையாளர் குமாரைத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட 6 பெண்களும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் ஆசிப்பை கானத்தூர் போலீஸாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண