TN School College Leave: 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.... பட்டியலில் உங்கள் ஊர் இருக்கா?

School Colleges Holiday November 12: கனமழை எதிரொலியால், தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Continues below advertisement

நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25 மாவட்டங்களுக்கு விடுமுறை:

இந்நிலையில் கனமழை எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, வேலூர், அரியலூர், சேலம், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ரெட் அலர்ட்:

மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகன மழைக்கு வாய்ப்புள்ளதால், வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

நாளை வானிலை நிலவரம்:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள்:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.. 

சென்னை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Tamil Nadu Rain News Today LIVE: மழை தொடர்பான உடனுக்குடனான செய்திக்கு இந்த லின்ங்க்கை கிளிக் செய்யவும்

Continues below advertisement