கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை விழா தொடங்கி நடக்கவுள்ளது. இதனால், முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவிற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்தவகையில் சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வழியே கொல்லத்திற்கு 3 சபரிமலை சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06061) வரும் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் (புதன் கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு இரவு 8.33 க்கு வந்து சேர்கிறது. பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 9.30க்கும், திருப்பூருக்கு இரவு 10.10க்கும், போத்தனூருக்கு இரவு 11.28க்கும் சென்று பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், காயங்குளம் வழியே கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06062) வரும் 17, 24, டிசம் பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் (வியாழக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், சென்னை எழும்பூர்- கொல்லம் வாராந்திர சிறப்பு கட் டண சிறப்பு ரயில் (06063) வரும் 18, 25 டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. 



சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து, 2 நிமிடத்தில் புறப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், பாலக்காடு வழியே கொல்லத்திற்கு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06064) வரும் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8,15, 22, 29 ஆம் தேதிகளில் (ஞாயிறுதோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது.


சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06065) வரும் 21, 28 டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23ம் தேதிகளில் (திங்கட்கிழமைதோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து செல்கிறது. கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06066) வரும் 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24ம் தேதிகளில் (செவ்வாய்தோறும்) இயக்கப்படுகிறது.


கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர்சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (11ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.